திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 14 மே 2018 (19:42 IST)

தேர்தல் முடிவுக்கு முன்பே பதவியேற்பு விழாவுக்கு தயாரான எடியூரப்பா

நாளை தேர்தல் முடிவுக்கு பின் டெல்லி சென்று பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடியை அழைப்பேன் என்று பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா கூறியுள்ளார்.

 
கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் 222 தொகுதிகளுக்கு கடந்த 15ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில் 72.13% வாக்குகள் பதிவாகி உள்ளன. நாளை ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் இதற்காக 38 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 
 
கருத்துக்கணிப்பில் பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளில் யார் அதிகம் இடம் பிடித்தாலும் பெரும்பான்மை கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா பாஜக வெற்றி பெறும் என்றும், தான் முதல்வராவது உறுதி என்றும் கூறியுள்ளார்.
 
அவர் கூறியுள்ளதாவது:-
 
நாளை தேர்தல் முடிவுக்கு பின் உடனடியாக விமானம் மூலம் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து முதல்வராக பதவியேற்கும் விழாவிற்கு அழைப்பேன் என்று கூறியுள்ளார்.