செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : திங்கள், 14 மே 2018 (11:30 IST)

இனிமேல் தேர்தலில் போட்டியிட மாட்டேன்: முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு

கர்நாடக மாநிலத்தில் கடந்த 12ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இந்த தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை தக்க வைத்து கொள்ளுமா? அப்படியே தக்க வைத்து கொண்டாலும் முதல்வர் சித்தராமையா மீண்டும் முதலமைச்சர் ஆவாரா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
 
இந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் சித்தராமையா, 'இனிவரும் தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
மதவாதத்திற்கு எதிராகவும், சமூக நீதியை காக்கவும் உயிருள்ளவரை போராட முடிவு செய்துள்ளதாக கூறிய சித்தராமையா, இனிமேல் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் இருப்பினும் காங்கிரஸ் கட்சியின் முன்னேற்றத்திற்காக பின்னணியில் இருந்து செயல்படுவேன் என்றும் தெரிவித்தார்.
 
காங்கிரஸ் கட்சியினர்களுக்கு வழிகாட்டியாக செயல்படுவேன் என்றும், இனிமேல் தேர்தல் அரசியல் தன்னிடம் இருக்காது என்றும் முதல்வர் சித்தராமையா மேலும் தெரிவித்தார்.  இந்த நிலையில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலோ அல்லது கூட்டணியில் ஆட்சி அமைத்தாலோ வேறு புதிய முதல்வரை தேர்வு செய்ய காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.