1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 16 நவம்பர் 2017 (13:39 IST)

துக்ளக் ஆட்சி நடத்தும் மோடி: யஷ்வந்த் சின்ஹா சாடல்!!

பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக இந்திய பொருளாதாரத்தில் ரூ.3.75 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா குற்றம் சாட்டியுள்ளார்.


 
 
பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளை குற்றம் சாட்டியுள்ளதோடு மோடி 700 ஆண்டுகளுக்கு முன் ஆட்சி செய்த துக்ளக்கின் ஆட்சியை பின்பற்றுகிறார் என விமர்சித்துள்ளார். 
 
கடந்த 700 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த சம்பவத்துடன் பணமதிப்பிழப்பை ஒப்பிட்டுள்ளார் பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா.
 
முகமது பின் துக்ளக் 700 ஆண்டுகளுக்கு முன்னரே புதிய கரன்சியை அறிமுகப்படுத்தி பழைய கரன்சிகளுக்கு முடிவு கட்டினார். எனவே பணமதிப்பிழப்பு என்பது 700 ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற்றது. இதைதான் தற்போது மோடி செய்துள்ளார்.  
 
பணமதிப்பிழப்புக்கு பிறகு அவர் பேசிய நீண்ட உரையில் 74 முதல் 75 முறை கருப்பு பணம் என்பதை குறிப்பிட்டார். பணமதிப்பிழப்பால் நாட்டுக்கு ரூ.3.75 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம் ஒற்றை காலில் நின்று கொண்டிருக்கிறது என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.