Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மோடிக்கு மலையாய் நின்ற ஹர்திக் பட்டேலின் அந்தரங்க வீடியோ வெளியாகி சர்ச்சை!!


Sugapriya Prakash| Last Updated: செவ்வாய், 14 நவம்பர் 2017 (15:18 IST)
குஜராத்தில் டிசம்பர் 9 மற்றும் 14 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. 

 
 
இந்நிலையில், கடந்த 22 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக ஆட்சியில் துணையாக இருந்தது பட்டேல் சமூகத்தினர். தற்போது இந்த தேர்தலில் இதற்கு மாறாக நடந்து வருகிறது.
 
பட்டேல் சமூகத்தினர் தற்போது பாஜகவுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். பாஜக-வை தோற்கடிப்பதையே கொள்கையாக கருதுகின்றனர். இதில் மும்முறமாக ஈடுபட்டி வருவது பட்டேல் சமூகத்தின் முக்கிய தலைவர் ஹர்திக் பட்டேல்.
 
இவர் பாஜக-வுக்கு எதிராக கடும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால், காங்கிரஸுக்கு ஆதாயம் கிடைத்தாலும் அதை பற்றி கவலை இல்லை என வெளிப்படையாக தெரிவித்துவிட்டார்.
 
தற்போது ஹர்திக் ஒரு பெண்ணுடன் இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இது குஜராத் மாநிலம் முழுவது வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் ஹர்த்திக் இது பாஜக-வின் திட்டமிட்ட சதி. என்னை அவமதிக்கவும் விமர்சிக்கவும் நினைத்து குஜராத மாநில பெண்களின் மானத்தை சீர்குலைக்கிறார்.
 
என் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. இது போன்ற செய்களுக்கு மக்களிடம் இருந்து தேர்தலில் நல்ல பாடம் கற்பர் என தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :