வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 19 ஜூன் 2020 (23:34 IST)

குழந்தையுடன் சென்ற பெண் பாலியல் பலாத்காரம் !

உத்தரப்பிரதேச மாநிலத்தில்  குழந்தைகளுடன் பயணம்செய்த ஒரு பெண்ணை டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் இருந்து  கவுதம் புத்தா நகருக்கு  படுக்கை வசதியுடன் கூடிய  பேருந்து இயக்கபடும் நிலையில்,  சில நாட்களுக்கு முன் பேருந்தில் ஏறிய அப்பெண் தனது குழந்தைகளுடன் பயணம் செய்துள்ளார்.

அப்போது, டிரைவர்களில் ஒருவர் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து,  அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீஸார் வழக்குப் பதிவு செய்து,  டிரைவரை கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.