1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash

பெண்ணாய் பிறந்தது தவறா? நான்கே வயதான குழந்தைக்கு பாலியல் தொல்லை!

நான்கே வயதான பெண் குழைந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 
 
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே  புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் பூபாலன், தனது வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்த 4 வயதான குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
 
இந்த அசவுகரிய செயலை குறித்து அந்த குழந்தை பெற்றோரிடம் கூறியுள்ளது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக ஆரணி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
பெற்றோர் அளித்த புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். எனினும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.