புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 22 மே 2018 (15:35 IST)

காங்கிரஸ் உதவி இல்லாமல் பாஜகவிற்கு எதிர்ப்பது சாத்தியமில்லை - தேவ கௌடா

காங்கிரஸ் இல்லாமல் பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைப்பது சாத்தியமில்லை என்று தேவ கௌடா கூறியுள்ளார்.

 
கர்நாடகாவில் பாஜகவின் முயற்சியை வீழ்த்தி காங்கிரஸ் - மஜக கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. பாஜக ஆட்சியமைக்க தேவையான எம்.எல்.ஏ.க்கள் இல்லாத போதிலும் ஆளுநர் உதவியுடன் ஆட்சியமைக்க கால அவகாசம் கோரி முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது.
 
நாடு முழுவதும் பாஜகவிற்கு எதிர் அணி உருவாகி வருகிறது. வரும் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜவை வீழ்த்த கங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்று திரண்டு வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகாவில் முதல்வராக பதவியேற்க உள்ள குமாரசாமியின் தந்தை மற்றும் முன்னாள் பிரதமர் தேவ கௌடா கூறியதாவது:-
 
குமாரசாமியின் பதவி ஏற்பு விழாவிற்கு பாஜகாவுக்கு எதிராக உள்ள அனைத்துக் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. அதில் சிலர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும் சிலர் எதிராகவும் உள்ளனர். 
 
வரும் 2019 பொதுத் தேர்தலில் பாஜகவை எதிர்க்க அனைத்துக் கட்சிகளையும் ஓரணியில் இணைக்க நான் விரும்புகிறேன். உண்மையை சொன்னால் கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் உதவியின்றி பாஜகவை எதிர்த்து எங்களால் ஆட்சி அமைத்திருக்க முடியாது.
 
பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் காங்கிரஸ் அவசியம் தேவை. காங்கிரஸ் இல்லாமல் அது சாத்தியமில்லை.