திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 5 டிசம்பர் 2024 (08:52 IST)

உள்ள விடுறியா? லாரன்ஸ் பிஷ்னோய்கிட்ட சொல்லட்டுமா? - சல்மான்கான் ஷூட்டிங் ஸ்பாட் வந்து மிரட்டிய ஆசாமி!

சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்துள்ள நிலையில் ஆசாமி ஒருவர் படப்பிடிப்பு தளத்தில் வந்து மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கான் வீட்டில் கடந்த சில மாதங்கள் முன்னர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்து வருகிறது. இதனால் அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

தற்போது சல்மான்கான், முருகதாஸ் இயக்கத்தில் “ஸிக்கந்தர்” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று படப்பிடிப்பு தளத்திற்குள் ஆசாமி ஒருவர் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு எழுந்துள்ளது. உடனடியாக அவரை ஊழியர்கள் தடுத்து பிடித்த போது “என்னை உள்ள விடுறியா? இல்லைன்னா லாரன்ஸ் பிஷ்னோயிடம் சொல்லட்டுமா?” என மிரட்டியுள்ளார்.

 

இதுகுறித்து படக்குழுவினர் ஷிவாஜி பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், விரைந்து வந்த போலீஸார் ஆசாமியை கைது செய்து சென்றுள்ளனர்.

 

Edit by Prasanth.K