1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 28 நவம்பர் 2022 (14:18 IST)

கணவனை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த மனைவி.. மகனும் உடந்தை?

murder
கணவனை துண்டு துண்டாக வெட்டிய மனைவி கணவனின் உடல் பாகங்களை பிரிட்ஜில் வைத்ததாகவும் இதற்கு அவருடைய மகனும் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 டெல்லியை சேர்ந்த அர்ஜுன் தாஸ் என்பவர் வேறு ஒரு பெண்ணுடன் தவறாக உறவு வைத்திருந்ததால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி, கணவனுடன் அடிக்கடி சண்டை போட்டுள்ளார். இதுகுறித்த வாக்குவாதம் முற்றிய நிலையில் சம்பவத்தன்று கணவன் அர்ஜூன் தாஸை அவரது மனைவி வெட்டிக்கொலை செய்துள்ளார் 
 
அதன் பிறகு கணவனின் உடலை 22 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் பதப்படுத்தி வைத்து வீட்டின் அருகே இருந்த கிரவுண்டில் ஒவ்வொன்றாக வீசி எறிந்தது விசாரணையில் தெரியவந்தது 
 
கணவனை கொலை செய்த மனைவிக்கு அவரது மகன் தீபக் உடந்தையாக இருந்துள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது/ கணவனை கொலை செய்து 22 துண்டுகளாக வெட்டிய மனைவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran