ஆன்லைன் காதலனை சந்திக்க 5 ஆயிரம் கி.மீ பயணம்! பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!
மெக்சிகோவில் ஆன்லைன் வழியாக ஒருவரை காதலித்து வந்த பெண் அவரை சந்திக்க சென்று கடலில் பிணமாக ஒதுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோ நாட்டை சேர்ந்த ப்ளாங்க ஒலிவியா ஆரில்லேனா கட்ரஸ் என்ற 51 வயது பெண் ஆன்லைன் மூலமாக ஹுவான் பாப்லோ ஜீசஸ் என்ற நபருடன் பழக்கமாகியுள்ளார். இருவருக்கும் இடையேயான பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
அதை தொடர்ந்து தனது காதலனை நேரில் சந்திக்க விரும்பிய ஒலிவியா சுமார் 5 ஆயிரம் கி.மீ பயணித்து காதலனை சந்திக்க சென்றுள்ளார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் அவர் திரும்ப வரவில்லை. இதனால் அந்த பெண்ணின் உறவினர்கள் அவரை தேட தொடங்கியதோடு அவரது ஆன்லைன் காதலரிடமும் விசாரித்துள்ளனர்.
அவர் ஒலிவியா தன்னை காண வந்ததாகவும் பின்னர் கிளம்பி சென்று விட்டதாகவும் கூறியுள்ளார். நீண்ட நாட்களாகியும் ஒலிவியா கிடைக்காத நிலையில் சமீபத்தில் ஹுவாச்சோ கடற்கரையில் ஒலிவியா பிணமாக கரை ஒதுங்கியுள்ளார்.
அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவரது உடலின் உள் உறுப்புகள் பல காணாமல் போயுள்ளது தெரிய வந்தது. அவர் உடல் உறுப்புகளை திருடும் கும்பலிடம் சிக்கி இருக்கலாம் என போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் ஒலிவியா தேடி சென்ற ஹுவானே அந்த உறுப்பு திருட்டு கும்பலில் ஒருவர்தான் என தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்வதற்கான வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit By Prasanth.K