திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 23 செப்டம்பர் 2019 (11:18 IST)

கணவனைக் கொன்று பெட்டிக்குள் போட்டு பூட்டிய மனைவி – நாற்றம் அடித்ததால் எடுத்த முடிவு !

ராஜஸ்தான் மாநிலத்தில் கணவனைக் கொன்று பெட்டிக்குள் போட்டு பூட்டி அறையைக் கொளுத்திய மனைவியைப் போலிஸார் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் அல்வார் மாநிலத்தில் குல்தீப் யாதவ் மற்றும் நிஷா ஆகிய தம்பதிகள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த சண்டையின் காரணமாக நிஷா தனது கணவரைக் கொலை செய்துவிட்டு அவரது உடலைப் பெட்டி ஒன்றில் போட்டு மறைத்து வைத்துள்ளார்.

ஆனால் இரு தினங்களில் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கவே பெட்டி இருந்த படுக்கையறையைக் கொளுத்தியுள்ளார். இதுபற்றிக் கேட்டபோது குழந்தைகள் தெரியாமல் நெருப்பைப் பற்ற வைத்துவிட்டதாகப் பொய் சொல்லியுள்ளார். மேலும் கணவனின் சிதைந்த உடலை குழந்தையை விட்டு அப்புறப்படுத்த சொல்லியுள்ளார். அதில் தலைமுடி மண்டை ஓடுகளைப் பார்த்த குழந்தை அளித்த தகவலின் அடிப்படையில் உறவினர்கள் போலிஸாரிடம் புகார் கொடுக்க நிஷாவைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.