ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Updated : புதன், 18 செப்டம்பர் 2019 (07:45 IST)

மோடியை சந்திக்கும் முன் அவரது மனைவியை சந்தித்த மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று பிரதமர் மோடியை சந்தித்து தனது மாநிலத்திற்கு தேவையான நிதி உதவிகள் குறித்து ஆலோசனை செய்ய உள்ளார். கடந்த சில வருடங்களாக பிரதமர் மோடி மற்றும் மம்தா பானர்ஜி ஆகிய இருவரும் இரு துருவங்களாக அரசியல் உலகில் செயல்பட்டு வரும் நிலையில் இன்றைய சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
 
இந்த நிலையில் நேற்று மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் இருந்து டெல்லி செல்வதற்காக விமான நிலையத்திற்கு முதல்வர் மம்தா பானர்ஜி காத்திருந்த போது, தற்செயலாக பிரதமர் மோடியின் மனைவி ஜசோதா பென் அவர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அவர் சில நிமிடங்கள் மோடியின் மனைவியுடன்  பேசிக் கொண்டிருந்ததாகவும், அதன்பின்னர் மோடியின் மனைவிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி ஒரு சேலையை பரிசாக அளித்ததாகவும் மேற்குவங்க செய்திகள் வட்டாரம் தெரிவிக்கின்றது 
 
 
பிரதமர் மோடியின் மனைவி ஜசோதா பென்அவர்கள் கடந்த சில நாட்களாக மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு கோவில்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பதும், அவ்வாறு ஒரு கோயிலுக்கு அவர் செல்வதற்காக கொல்கத்தா விமான நிலையத்திற்கு வந்தபோது அவர் தற்செயலாக முதல்வர் மம்தா பானர்ஜி அவர்களை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது
 
 
பிரதமர் மோடியை சந்திக்கும் முன்னரே அவரது மனைவியை சந்தித்து நலம் விசாரித்த மம்தா பானர்ஜி இது குறித்து மோடியிடம் தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்