வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (17:53 IST)

பேராசிரியரை கல்லூரி வளாகத்தில் செருப்பால் அடித்த மனைவி: அதிர்ச்சியில் மாணவர்கள்!

professor
பேராசிரியரை கல்லூரி வளாகத்தில் செருப்பால் அடித்த மனைவி: அதிர்ச்சியில் மாணவர்கள்!
பேராசிரியர் ஒருவரை அவரது மனைவி கல்லூரி வளாகத்தில் செருப்பால் அடித்த சம்பவம் பெரும் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
ஒரிசா மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி செய்து வரும் ஒருவர் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது திடீரென அந்த வகுப்பிற்குள் நுழைந்த அவருடைய மனைவி காலில் இருந்த செருப்பை எடுத்து சரமாரியாக உதவிபேராசிரியரை அடித்தார்
 
இதனையடுத்து மற்ற பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உதவி பேராசிரியரின் மனைவியை சமாதானப்படுத்த முயன்றும் அவர் விடாமல் செருப்பால் அடித்துக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
குடும்ப சண்டை காரணமாக ஆத்திரம் அடைந்த மனைவி கல்லூரிக்கு வந்து வகுப்பறையிலேயே பேராசிரியரை செருப்பால அடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவரையும் சமாதானப் படுத்தினார்கள் இந்த சம்பவம் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது