வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (20:40 IST)

கிரிக்கெட் வீரர் சஹால் மனைவியை விவாகரத்து செய்கிறாரா?

sahal
பிரபல இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சஹால் தனது மனைவியை விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்திய கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் சஹால். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு நடன இயக்குனர் தனஸ்ரீ என்பவரை திருமணம் செய்துகொண்டார்
 
இந்த நிலையில் சஹால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வாழ்க்கை தயாராகிறது என்று பதிவு செய்திருந்ததார். இதனால் சஹால் - தனுஸ்ரீ இருவரும் விவாகரத்து பெறுகிறார்களா என்ற குழப்பம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது 
இதனால் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சஹால் ஒரு பதிவு செய்துள்ளார் 
 
அதில் எங்கள் உறவு தொடர்பான எந்த விதமான வதந்தியை நம்ப வேண்டாம் என்றும் உங்கள் அனைவருக்கும் பணிவான வேண்டுகோள் தயவு செய்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் என்றும் பதிவு செய்துள்ளார்