வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 18 ஆகஸ்ட் 2021 (15:15 IST)

மால்கள் திறக்க அனுமதித்தும் திறக்கப்படாதது ஏன்? காரணம் இதுதான்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மால்கள் திறக்க அரசு அனுமதி கொடுத்தும் பெரும்பாலான மால்கள் திறக்கப்படாதது என்பது பெரும் ஆச்சரியமாக உள்ளது. இதற்குரிய காரணம் என்னவென்று பார்ப்போம் 
 
மகாராஷ்டிர மாநிலத்தில் சமீபத்தில் மால்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் மால்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் கண்டிப்பாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும் அது மட்டுமின்றி இரண்டு டோஸ் செலுத்தி 14 நாட்கள் ஆகியிருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது
 
மகாராஷ்டிர மாநிலத்தில் மால்களில் பணிபுரியும் பெரும்பாலானோர் ஒரு டோஸ் மட்டுமே தடுப்பு ஊசி செலுத்தி உள்ளார்கள் என்பதால் பெரும்பாலான மால்கள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஒரு டோஸ் தடுப்பு ஊசி செலுத்தினால் போதும் என்று நிபந்தனையை தளர்த்த வேண்டும் என மால்கள் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மகாராஷ்டிர மாநில அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோரிக்கையை மகாராஷ்டிரா மாநிலம் பரிசீலிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்