திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 19 செப்டம்பர் 2018 (17:24 IST)

முத்தலாக் தடுப்பு அவசர சட்டத்தில் மத்திய அரசு செய்துள்ள மூன்று திருத்தங்கள் என்னென்ன?

முஸ்லிம் சமூகத்தில் முத்தலாக் மூலம் விவாகரத்து பெறும் வழக்கத்தை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

எனவே முத்தலாக் தடுப்பு மசோத ஒன்று மத்திய சட்ட  அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த முத்தலாக் முறையை தடை செய்யும் ”முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்ட மசோதா” மக்களவையில் நிறைவேறி விட்டது. ஆனாலும் மாநிலங்களவையில் இன்னும் நிலுவையில் இருக்கிறது.

தற்போது இந்த முத்தலாக் குறித்த அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இருப்பினும் மூன்று அவசர சட்டங்கள் மூலம் முத்தலாக் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது.

முத்தலாக் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள மூன்று திருத்தங்கள் பி்ன்வருமாறு:

1)முத்தலாக் தடுப்பு சட்டத்தில் கைதாகும் நபர்கள் ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம்.

2)முத்தலாக் வழங்கியபின் கணவன் மனைவிக்கு இடையே சமரசமானால் அபராதம் செலுத்தி மீண்டும் தம்பதிகளாக சேர்ந்து கொள்ளலாம்.

3)முத்தலாக்கில் கணவன் ,மனைவியின் குடும்பத்தினர் மட்டுமே புகார் அளிக்க முடியும்.