மக்களுக்கு ஆதரவாக போராடுபவர்களை விடமாட்டோம் - பிரகாஷ் ராஜ்

Prakash Raj
Last Updated: திங்கள், 29 ஜனவரி 2018 (20:50 IST)
மக்களுக்கு ஆதரவாக போராடுபவர்களை சமாதி செய்ய மாட்டோம், விதைகளாக விதைப்போம் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.

 
கர்நாடகாவை சேர்ந்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த சில மாதங்களுக்கு மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு நான் கவுரி, நாம் எல்லோரும் கவுரி என்ற புத்தக வெளியீட்டு விழா பெங்களூரில் நடைபெற்றது. 
 
இதில் நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சமுதாயத்தில் மக்களுக்காக போராடுவதற்கு கிடைக்கும் பலன் கவுரி லங்கேஷ் மறைவு. 
 
மக்களுக்கு ஆதரவாக போராடுபவர்களை சமாதி செய்ய மாட்டோம், விதைகளாக விதைப்போம். யாராவது ஒரு குரலின் சத்தத்தை அடக்கினால் அது பல குரலாக எழும்பும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் எச்சரித்துள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :