1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 1 ஜனவரி 2018 (16:11 IST)

சீமானாக மாறிய பிரகாஷ்ராஜ்; கன்னடர்கள் மட்டுமே ஆட்சி செய்ய வேண்டும்!

கர்நாடகத்தில் கன்னடர்களை தவிர மற்றவர்கள் ஆட்சி புரிய வாய்ப்பு வழங்கக்கூடாது என்று நடிகர் பிரகாஷ்ரா தெரிவித்துள்ளார்.

 
2017ஆம் ஆண்டின் சிறந்த நபர் விருது வழங்கும் விழாவில் கலந்துக்கொண்டு பேசிய பிரகாஷ் ராஜ் கூறியதாவது:-
 
எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. பெங்களூரில் அமைதியை சீர்குலைக்க முயற்சி செய்பவர்களுக்கு இடம் தரக்கூடாது. கர்நாடகத்தில் கன்னடர்களை தவிர மற்றவர்கள் ஆட்சி புரிய வாய்ப்பு வழங்கக்கூடாது.
 
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையான பிறகு என்னிடத்தில் நிறைய மாற்றங்கள் உண்டானது. அதன் பிறகு தான் பேச ஆரம்பித்தேன். நான் எந்த கட்சிக்கும் ஆதரவாக இல்லை. இந்த சமுதாயத்தில் அரசியல், சமூக சூழ்நிலை குறித்து மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
 
எனக்கு கேள்வி கேட்கும் தைரியத்தை ஏற்படுத்தியவர்கள் மூத்த பத்திரிகையாளர்கள் தான். அவர்களின் வழிகாட்டுதலால் தான் நான் வளர்ந்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.