வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 20 மார்ச் 2019 (08:40 IST)

நாங்கள் தான் உண்மையான இந்துக்கள்: பாஜகவை விளாசிய முதலமைச்சர்

பாஜகவினர் நாங்கள் தான் உண்மையான இந்துக்கள் என்று பொய் கூறி வருகின்றனர். உண்மையில் அவர்கள் போலி இந்துக்கள், நாங்கள் தான் உண்மையான இந்துக்கள் என தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ் ஆவேசமாக கூறியுள்ளார்.
 
தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ், கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் ஆட்சி செய்து இந்தியாவின் வளர்ச்சிக்கு எதுவுமே செய்யவில்லை. காங்கிரஸ் உண்மையாக வேலை செய்திருந்தால் இந்தியா இந்நேரம் சிங்கப்பூர், சீனா போல் வளமாக இருந்திருக்கும்
 
காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் ஒரே மாதிரிதான் ஆட்சி செய்து வருகின்றனர். ஒரு திட்டம் ஆரம்பித்தால் அந்த திட்டத்திற்கு நேரு, ராஜிவ் காந்தி, இந்திரா காந்தியின் பெயர்களை காங்கிரஸ் அரசும், தீன்தயாள் உபாத்யாயா, ஷியாம் பிரகாஷ் முகர்ஜியின் பெயர்களை பாஜக அரசும் வைப்பார்கள். பெயர்கள் தான் மாறுமே தவிர, மக்களுக்கான பயன் என்றுமே சென்று சேராது.
 
இந்தியாவை வளமான பாதைக்கு கொண்டு செல்ல காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணியின் ஆட்சி மத்தியில் அமையவேண்டும்' என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் பேசினார்.