வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 1 நவம்பர் 2020 (17:57 IST)

’கை’ சின்னத்திற்கு வாக்களியுங்கள்: பிரச்சாரத்தில் உளறிய பாஜக எம்பி!

’கை’ சின்னத்திற்கு வாக்களியுங்கள்: பிரச்சாரத்தில் உளறிய பாஜக எம்பி!
ஒருபக்கம் பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் மத்திய பிரதேச மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலைய்லி ஒரு தொகுதியில் சமீபத்தில் பாஜகவில் இணைந்த ஜோதிராதித்யா சிந்தியா தீவிரமாகப் பிரச்சாரம் செய்தபோது கை சின்னத்தில் வாக்களியுங்கள் என பழக்கதோஷத்தில் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
சமீபத்தில் காங்கிரஸிலிருந்து பிரிந்து பாஜகவில் இணைந்த ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு மாநிலங்களவை எம்பி பதவி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சியிலேயே இருந்ததால் அவர் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது திடீரென கை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று பழக்க தோஷத்தில் கூறினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் தன்னுடைய தவறை சுதாரித்துக்கொண்டு தாமரை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று கூறினார்
 
மத்திய பிரதேச மாநிலத்தில் ஜோதிராதித்யா சிந்தியாவின் 22 ஆதரவு எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததால் அங்கு மொத்தம் 28 சட்டசபை தொகுதி காலியாக உள்ளது என்பதும் அந்த தொகுதிகளுக்கு நவம்பர் 3ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது