1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 1 நவம்பர் 2020 (12:29 IST)

நம்ம தடுக்க வேண்டாம்.. அவங்களே மொக்கை வாங்கிடுவாங்க! – வேல் யாத்திரை குறித்து தா.பாண்டியன்!

பாஜக நடத்தும் வேல் யாத்திரையை தடை செய்ய வேண்டும் என பல கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் தடை விதிக்க தேவையில்லை என கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கந்த சஷ்டி விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்த நிலையில் கடவுள் முருகனை போற்றி தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்துவதாக பாஜக அறிவித்திருந்தது. பாஜகவின் வேல்யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என திருமாவளவன் உள்ளிட்டோர் கோரி வந்தனர். இந்நிலையில் வேல் யாத்திரை தேதியை பாஜக அறிவித்துள்ளது.

இந்த வேல் யாத்திரை குறித்து பேசியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் “பாஜகவின் வேல் யாத்திரையை தடை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வேல் யாத்திரை செல்லும் இடங்களில் மக்கள் வரவேற்பு அளிக்க மாட்டார்கள். தமிழகத்தில் பாஜகவால் கால் ஊன்ற முடியாது” என தெரிவித்துள்ளார்.