செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : செவ்வாய், 3 டிசம்பர் 2019 (13:28 IST)

சுற்றுலாக்கு வந்தவர்களை துரத்திய புலி;அலறியடித்த பயணிகள்..வைரல் வீடியோ

ராஜஸ்தானில் உள்ள ஒரு வனவிலங்கு பூங்காவில் ஒரு புலி சுற்றுலா பயணிகளின் வாகனத்தை துரத்தி செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் சவாய் மதோப்பூர் என்ற பகுதியில் அமைந்துள்ளது ரன்தம்போர் வனவிலங்கு பூங்கா. மிகவும் பிரபலமான இந்த வனவிலங்கு பூங்காவில் உள்ள மிருகங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிட அவர்களுக்கென்றே ஜீப் சவாரி உள்ளது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் ஜீப்பில் பார்வையிட வந்தபோது ஒரு புலி அவர்களை துரத்தி சென்றுள்ளது. இதனை சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

courtesy ANI