1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 3 டிசம்பர் 2019 (09:12 IST)

மோடியின் அழைப்பை நான் ஏற்கவில்லை..சரத் பவார் பரபரப்பு

ஆட்சி அமைக்க பிரதமர் மோடியின் அழைப்பை நான் ஏற்கவில்லை என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் பரபரப்பாக பேசியுள்ளார்.

மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்கான பல இழுபறிகளுக்கு பிறகு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆதரவுடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்றார்.

இந்நிலையில் ஒரு தனியார் தொலைகாட்சிக்கு பேட்டியளித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், ”பிரதமர் மோடி மஹாராஷ்டிராவில் ஆட்சியமைக்க எனக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் அவரிடம் எனக்குள்ள தனிப்பட்ட உறவு நல்ல முறையே தொடர வேண்டும், ஆதலால் ஒன்றிணைந்து செயல்படுவது சாத்தியமற்றது என கூறிவிட்டேன்” என கூறினார்.

மேலும், “நிச்சயமாக பிரதமர் மோடி தலைமையிலான மந்திரி சபையில் தனது மகள் சுப்ரியாவுக்கு  வாய்ப்பு இருந்தது எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது.