திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Modified: திங்கள், 23 டிசம்பர் 2019 (18:47 IST)

வன்முறையாளர்கள் பேருந்துக்கு தீ வைப்பு... வீடியோ காட்சிகள் வெளியீடு

மத்திய அரசால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு எங்கிலும் பலத்த போராட்டங்கள் எழுந்தன. அப்போது பல இடங்களில் வன்முறைகள் வெடித்தன.
இந்நிலையில், டெல்லியில் கடந்த 15 ஆம் தேதி ஜாமியா நகர் பகுதியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக சம்பவம் நடைபெற்ற இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளாஇ காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
 
இதில், ஜாமியா பல்கலைக்கழகம் 4 வது வாயில் அருகே சில வன்முறையாளர்கள்  ஒரு இரு சக்கரவாகனத்தில் இருந்து பெட்ரோல் திருடுவதும், அந்தப் பெட்ரோலை மற்றொரு வாகனத்தின் மீது ஊற்றி  வாகனத்துக்கு தீ வைப்பதும், அரசுப் பேருந்துக்கு தீ வைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
 
இந்நிலையில்  வன்முறையாளர்களைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.