புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 30 ஜூலை 2019 (12:11 IST)

என்னை மன்னித்து விடுங்கள்: விஜி சித்தார்த்தா எழுதிய உருக்கமான கடிதம்

முன்னாள் கர்நாடக முதல்வர் எஸ்எம் கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த்தா என்பவர் திடீரென மாயமானதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
முன்னாள் கர்நாடக முதல்வரின் எஸ்எம் கிருஷ்ணாவின் மருமகன் விஜி சித்தார்த்தா. இவர் கஃபே காபி டே' நிறுவனத்தின் உரிமையாளர் என்பது தெரிந்ததே. இவர் நேற்று தனது காரில் மங்களூர் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஆற்றில் பாலத்தில் தன்னை இறக்கி விடுமாறு டிரைவரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அவரை இறக்கி விட்ட டிரைவர் நெடுநேரம் அவருக்காக காத்திருந்து அவர் திரும்பவில்லை

இதனால் பதட்டமடைந்த அவர் சித்தார்த்தின் வீட்டிற்கு தகவல் கொடுத்துள்ளார். இது குறித்து சித்தார்த் குடும்பத்தினர் போலீசில் புகார் செய்துள்ளனர். இந்நிலையில் விஜி சித்தார்த்தா எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த கடிதத்தில் “ என் மீது நம்பிக்கை வைத்திருந்த அனைவரையும் கைவிட்டதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனது நிறுவனத்தின் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் நான்தான் பொறுப்பு. யாரையும் ஏமாற்றுவது என் நோக்கமல்ல. நீண்ட நாட்களாக போராடி வருகின்றேன். இனியும் மன அழுத்தங்களை தாங்க முடியாது என்பதால் அனைத்தையும் கைவிடுகிறேன். ஒரு தொழில்முனைவோராக நான் தோற்றுவிட்டேன். ஆனால் ஒருநாள் என்னை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதம் கர்நாடகாவில் மட்டுமல்ல கஃபே காபி டே ஊழியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்பே அவரது இந்த முடிவுக்கு காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் சித்தார்த்தா தலைமறைவாக இருக்கிறாரா என்பது குறித்து போலீஸ் விசாரித்து வருகின்றனர்.