வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 29 ஜூலை 2019 (18:56 IST)

மூன்றாம் படிநிலைக்கு உயர்த்தப்பட்டது சந்திரயான் 2..இஸ்ரோ அறிவிப்பு

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்கு விண்ணில் செலுத்தப்பட்ட விண்கலமான சந்திரயான்-2, இன்று வெற்றிகரமாக மூன்றாம் படிநிலைக்கு உயர்த்தப்பட்டது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-2 விண்கலம், ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் மூலம், கடந்த 22 ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் புறப்பட்ட 16 நிமிடம் 24 வினாடிகளில் குறிப்பிட்ட இலக்கில் ராக்கெட், சந்திரயான்-2 விண்கலத்தை சேர்த்தது.

ராக்கெட்டில் இருந்து பிரிந்த விண்கலம் பூமிக்கு அருகே குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவிலும், 45,475 கி.மீ. தொலைவிலும் நீள்வட்ட பாதையில் பூமியைச் சுற்றி வந்தது. இதன் பின்னர் கடந்த புதன் கிழமை மதியம் 2.52 மணியளவில் சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுப்பாதை முதன்முதலாக உயர்த்தப்பட்டது. அதாவது பூமிக்கு அருகே, குறைந்த பட்சமாக 230 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 45,163 கி.மீ. தொலைவிலும் பூமியை சுற்றி வரும் வகையில் உயர்த்தப்பட்டது.

இதை தொடர்ந்து சந்திரயான் 2 சுற்றுப்பாதை, கடந்த 26 ஆம் தேதி இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டது. தரை கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்தபடியே நேற்று அதிகாலை 1.08 மணியளவில் சிக்னல் மூலம் சந்திரயான் -2 விண்கலத்தில் 71792 உள்ள மோடாரை விஞ்ஞானிகள் 16 நிமிடம் இயக்கினார்கள். இதை தொடர்ந்து இன்று மூன்றாவது முறையாக சுற்றுப்பாதை மேலும் ஒரு படிநிலைக்கு உயர்த்தப்பட்டது.

மதியம் 3.12 மணியளவில் பெங்களூருவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து சிக்னல்கள் மூலம் சந்திராயன்-2 விண்கலத்தில் உள்ள மோட்டாரை 989 நிமிடங்களுக்கு விஞ்ஞானிகள் இயக்கினார்கள். தற்போது 71792 கி.மீ நீள்வட்ட பாதையில் சந்திரயான்-2 பூமியைச் சுற்றி வருவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இதனையடுத்து நான்காவது முறையாக ஆகஸ்டு மாதம் 14 ஆம் தேதி மேலும் உயர்த்தப்படும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதில் பூமியின் சுற்று வட்டப்பாதையிலிருந்து விலகி, சந்திரனின் சுற்றுவட்டபாதைக்கு சந்திரயான்-2 செல்லும் எனவும் கூறுகின்றனர்.

இறுதியாக செப்டம்பர் 7 ஆம் தேதி, சந்திரயான்-2 விண்கலம் நிலவில் இறங்கும் எனவும், விண்கலத்தின் ஆர்பிட்டர் சந்திரனுக்கு அருகாமையில் சுற்றிவரும்போது, அதிலிருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து நிலவின் தென் துருவில் தரை இறங்கும் எனவு கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.