வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 16 செப்டம்பர் 2017 (15:55 IST)

தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என ஆசிரியையிடம் வாதிட்ட கல்வி அமைச்சர்

உத்தரகாண்ட் மாநிலத்தின் கல்வி அமைச்சர் பள்ளியில் ஆய்வு செய்ய சென்றபொது ஆசிரியை ஒருவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 

 
உத்தரகாண்ட் மாநிலத்தின் கல்வி அமைச்சர் அரவிந்த் பாண்டே அடிக்கடி அரசு பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்வது வழக்கம். சமீபத்தில் அவர் டேராடுனில் உள்ள அரசு பள்ளி ஒன்றுக்கு சென்றபோது கணக்கு பாடம் நடந்து கொண்டிருந்த வகுப்பு அறைக்கு சென்றார்.
 
அப்போது அங்கிருந்த ஆசிரியையிடம் மைன்ஸ் ஒன்னும், மைனஸ் ஒன்னும் எவ்வளவு என கேட்டார். அதற்கு அந்த ஆசிரியை மைனஸ் இரண்டு என சரியான பதிலை தெரிவித்தார். ஆனால் அமைச்சர் தவறு என கூறியதுடன் ஜீரோ என்பதே சரியான விடை தவறான பதிலை கூறினார். ஆசிரியை அவர் கூறிய பதில் தவறு என சுட்டி காட்டியதுடன் அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார்.
 
ஆனால் அமைச்சர் அதை ஏற்கவில்லை. அதோடு அந்த ஆசிரியையை கடுமையாக திட்டுயுள்ளார். இந்த சம்பவம் சமூக வலைத்தளகளில் தீயாக பரவி பெரும் சர்ச்சைய ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் அமைச்சர் வேறொரு பள்ளியில் ஆசிரியைகள் உடை அணிவது குறித்து பேசியது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் கல்வி அமைச்சர் அரவிந்த பாண்டே மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்துவோம் என மாநில ஆசிரியர் சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.