திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 10 ஜனவரி 2018 (19:17 IST)

மீண்டும் பணமதிப்பிழப்பு: ஆனால், இது வேறு....

கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டு இந்தியாவையே கதிகலங்க விட்டார். இந்நிலையில், மீண்டும் பணமதிப்பிழப்பு என்றவுடன் அதிர்ச்சி அடையே வேண்டாம். இது வேறு தரப்பினரின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையாகும்.
 
உத்தரப்பிரதேசம் மாநிலம் ராம்பூரை சேர்ந்த பிச்சைக்காரர்கள், 1 ரூபாய் நாணயத்தை பணமதிப்பிழப்பு செய்துள்ளனர். அதாவது, அங்குள்ள பிச்சைக்காரர்கள் ஒரு ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்து வருகின்றனர். 
 
இதுபற்றி பிச்சைக்காரர்கள் தெரிவித்தபோது, தற்போதைய 1 ரூபாய் நாணயம் மிக சிறியதாக உள்ளது. இதனால் கடைக்காரர்கள், ரிக்ஷாக்காரர்கள் இதை ஏற்க மறுக்கின்றனர். எனவே, நாங்களும் இனி 1 ரூபாய் நாணயத்தை வாங்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர். 
 
பொதுவாக பிச்சைகாரர்களுக்கு 1 ரூபாய் வழங்குவதை வழக்கமாக மக்கள் அனைவரும் வைத்துள்ளதால், இனி இரண்டு ரூபாய் முதல்தான் உத்தரப்பிரதேசத்தில் தானம் துவங்கும் என தெரிகிறது.