திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (16:58 IST)

யுஜிசி நெட் தேர்வு 3வது முறையாக ஒத்திவைப்பு: ரமேஷ் பொக்ரியால்

யுஜிசி நெட் தேர்வு 3வது முறையாக ஒத்திவைப்பு: ரமேஷ் பொக்ரியால்
ஏற்கனவே இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி தேர்வு தற்போது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கொரனோ வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக யுஜிசி நெட் தேர்வு தேர்வு குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாகவும், இந்த தேர்வு நடத்தப்படும் தேதி குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அவர்கள் அறிவித்துள்ளார் 
 
கல்லூரி பேராசிரியர்களுக்காக நடத்தப்படும் தேர்வு நெட் என்பது தெரிந்ததே. இந்த தேர்வானது ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த முறை தேர்வு நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது மீண்டும் இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
 
கொரோனா பாதிப்பு நாடு  முழுவதும் அதிகரித்து வருவதால் இந்த தேர்வு எழுதுபவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்