ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதி !
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.
எனவே, சாதாரண மக்கள் மமுதல் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் பாதிக்கப்படுவருகின்றனர்.
இந்நிலையில் இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
எனக்கு சிறிய அறிகுறிகள் தென்பட்டவுடன் நான் கொரோனா டெஸ்ட் செய்தேன். அப்போது எனக்கு கொரோனா பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டது. எனவே என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் பின்வறும் பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளார்.