திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 14 ஜூலை 2022 (12:29 IST)

அதிமுக உங்க அப்பன் வீட்டு சொத்தா? பலி வாங்கும் ஜெ.ஆவி? – உதயகுமார் எச்சரிக்கை!

udhayakumar
அதிமுக அலுவலக கதவை எட்டி உதைத்த நபர் இறந்த சம்பவம் குறித்து ஆர்.பி.உதயகுமார் வீடியோ வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களால் இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இந்த பொதுக்குழுவே செல்லாது என ஓபிஎஸ் தரப்பு கூறி வருகிறது.

இந்நிலையில் பொதுக்குழு கூட்டத்தன்று ஓபிஎஸ் ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்தை உடைத்து உள்ளே சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து கட்சி அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. அதிமுக தலைமை அலுவலக கதவை எட்டி உதைத்த நபர் நேற்று அரியலூர் அருகே ஒரு விபத்தில் இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வத்திற்கு கேள்வி எழுப்பி வீடியோ வெளியிட்டுள்ள ஆர்.பி.உதயக்குமார் “இப்படியான இழி செயலில் நீங்கள் ஈடுபடுவீர்கள் என்று கட்சியில் யாருமே எதிர்பார்க்கவில்லை. அதிமுக என்ன உங்கள் பாட்டன் வீட்டு சொத்தா? அல்லது உங்கள் சொத்தா? புரட்சி தலைவர் எம்ஜிஆர், அம்மாவின் ஆன்மா உயிரோடு இருப்பதற்கான சாட்சிதான் நேற்று அரியலூரில் நடந்த அந்த விபத்து” என்று கூறி பேசியுள்ளார்.