ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 13 ஜூலை 2022 (18:32 IST)

அதிமுகவை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வேன்: நன்றி தெரிவித்து ஈபிஎஸ் கடிதம்

Edappadi
எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து அவர் கடிதம் எழுதியுள்ளார்
 
அந்த கடிதத்தில் அனைவரின் ஒத்துழைப்புடன் அதிம்கவை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வேன் என்றும் ஜெயலலிதாவின் எண்ண ஓட்டத்தை நினைவாக்கும் வகையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய கடுமையாக உழைப்பேன் என்றும் தெரிவித்துள்ளார் 
 
அதிமுக பொதுக்குழுவில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவோடு எடப்பாடிபழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக ஆகியுள்ள நிலையில் விரைவில் அவர் நிரந்தர பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.