Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பசுக்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை; தீயாக பரவும் திட்டம்


Abimukatheesh| Last Updated: திங்கள், 31 ஜூலை 2017 (11:24 IST)
உத்தரபிரதேச மாநிலத்தை தொடர்ந்து சத்தீஸ்கரிலும் பசுக்களுக்காக ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படும் என்று ராமன்சிங் தெரிவித்துள்ளார்.

 

 
ஆட்சிக்கு வந்த பசு அரசியல் என ஒன்று உருவெடுத்துள்ளது. பசுக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் சில சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அண்மையில் நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலத்தில் பசுக்களுக்கு பிரத்யேகமாக ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. 
 
இந்நிலையில் தற்போது சத்தீஸ்கர் மாநிலத்திலும் பசுக்களுக்காக ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ராமன்சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
பசுக்களுக்கு உணவு, குடிநீர் வழங்க ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்படும். முதல் கட்டமாக 10 மாவட்டங்களில் இச்சேவை தொடங்கப்படும். சிறப்பாக பராமரிக்கப்படும் முதல் 10 மாட்டுக்கொட்டகைகளுக்கு வருடத்திற்கு ரு.10 லட்சம் வழங்கப்படும் என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :