ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 18 ஜூலை 2020 (17:06 IST)

ஒரு எறும்புத்திண்ணியின் விலை 65 லட்ச ரூபாயா? ஆன்லைனில் விற்க முயன்ற கும்பல்!

ஆந்திர மாநிலத்தில் எறும்புத் திண்ணியை ஒரு கும்பல் 65 லட்ச ரூபாய்க்கு ஆன்லைன் மூலமாக விற்க முயன்றுள்ளது.

இந்தியாவில் மான், உடும்பு உள்ளிட்ட சில வன விலங்குகளைப் பிடிக்கவோ அல்லது விற்பனை செய்யவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உள்ள ஒரு அரிய விலங்கினம்தான் அலுங்கு என அழைக்கப்படும் எறும்புத்திண்ணி எனப்படும் விலங்கு. உடல் முழுவதும் செதில்களால் இருக்கும் இந்த எறும்புத்திண்ணிகளை கொண்டு சில அரியவகை மருந்துகள் தயாரிக்கப்படுவதாகவும், சீனா உள்ளிட்ட நாடுகளில் இதை விரும்பி சாப்பிடுவதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் இவற்றைக் கள்ளமார்க்கெட்டில் வாங்கி விற்க ஒரு கூட்டம் உள்ளது.

இந்நிலையில்தான் ஆந்திர மாநிலத்தில் உள்ள  குண்டூர் மாவட்டத்தில் உள்ள எத்லப்பாடு வனப்பகுதியில் இருந்து அலுங்கு ஒன்றை பிடித்த 3 நபர்கள் அதனை ஆன்லைனில் மூலமாக விற்பனை செய்ய முயன்றனர். இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் வரவே அவர்கள் வாடிக்கையாளர்கள் போல பேசியுள்ளனர். 65 லட்சத்துக்கு வாங்கிக் கொள்வதாக சொல்லி சென்று மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். வர்களிடமிருந்து எறும்பு தின்னியையும் மீட்டு வனப்பகுதியில் விட்டுள்ளனர்.