திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 6 டிசம்பர் 2022 (21:34 IST)

சொந்த மகள் உட்பட 20 பெண்களை திருமணம் செய்த மதபோதகர் கைது!

Samuel Bates
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு மதபோதகர் தன் சொந்த மகள் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்து கொண்ட  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த நபர் சாமுவேல் பேட்ஸ்( 46). இவர்  கடந்த 2019 ஆம் ஆண்டு தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று அழைத்துக் கொண்டதுடன் தன்னைப் ஃபாலோயர்களையும் அவ்வாறு அழைக்கும்படி கூறியிருந்தார்.

இதையடுத்து, அவர் டீஜ் ஏஜ் பெண்களையே தேர்வு செய்து திருமணம் செய்து கொண்டு வந்துள்ளார். இதுவரை இவர்  20 க்கும் அதிகமான பெண்களை திருமணம் செய்துள்ளார் எனவும் அதில், பெரும்பாலானோர் 15 வயதிற்குட்பட்டவர்கள் எனத் தகவல் வெளியாகிறது.

இதில், ஒருவர் அவரது சொந்த மகள் என்று கூறப்படும் நிலையில், போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர். 15 வயதிற்குட்பட்ட பெண்களை திருமணம் செய்துள்ளதால், அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Edited by Sinoj