புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 15 ஜூலை 2018 (17:45 IST)

திருடிய நகைகளை மன்னிப்பு கடிதத்துடன் திருப்பி கொடுத்த திருடன்

கேரளா ஆலப்புழா அருகே திருடன், வீட்டில் கொள்ளையடித்த நகைகளை மன்னிப்பு கடிதத்துடன் திருப்பி கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே கருமாடி என்ற பகுதியைச் சேர்ந்த மதுகுமார் வீட்டின் கதவை மறந்து பூட்டாமல் திருமண நிகழ்ச்சி ஒன்று சென்றுள்ளார்.
 
பின்னர் இரவு வீடு திரும்பியபோது வீட்டிலிருந்த நகைகள் திருடு போனது தெரியவந்துள்ளது. உடனே அவர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  
 
இதையடுத்து காவல்துறையினர் அவர் கொடுத்த புகாரின் அடைப்படையில் விசாரணையை தொடங்கியுள்ளனர். கடந்த புதன்கிழமை அவர் நகை காணாமல் போனது குறித்து புகார் அளித்துள்ளார். அதற்கு மறுநாளே அவரது வீட்டின் வாசலில் காணாமல் போன மொத்த நகையும் இருந்துள்ளது. 
 
அதில் ஒரு கடிதமும் இருந்துள்ளது. அந்த கடிதத்தில் என்னை மன்னித்துவிடுங்கள், பணத்தேவை இருந்ததால் இப்படி செய்துவிட்டேன். இனி இப்படி திருட மாட்டேன். எனக்கு எதிராக போலீசில் புகார் எதுவும் அளிக்க வேண்டாம். என்று எழுதியுள்ளார். 
 
இதையடுத்து மதுகுமார் போலீசில் அளித்த புகாரை வாபஸ் பெற்றார்.