வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 6 ஜூன் 2019 (15:53 IST)

வங்கி ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு இனி கட்டணங்கள் இல்லை ...ரிசர்வ் பேங்க் அதிரடி

வங்கிகளுக்குச் சென்று  பணம் கட்ட, அனுப்ப வேண்டுமானால் வேலைக்கு லீவு போடனும் என்ற காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது. நவீன இணைய யுகத்தில் வங்கியில் நம் கணக்கில் பணமும், கையில் ஒரு செல்போனும் இருந்தால் போதும் உலகில் யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்ப முடியும்.
ஆனால் ஆன்லைனில் பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ள  வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன. இந்நிலையில் இந்தக் கட்டணங்களை  நீக்கி இதன்  பயன்கள் வாடிக்கையாளர்களுக்குச் செல்ல வேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தவிட்டுள்ளது.
 
அதில், NEFT மற்றும் RTGS போன்ற பணப்பரிவர்த்தனைகளை வாடிக்கையாளர்கள் மேற்கொண்டால் அதற்கு விதிக்கப்படும் கட்டணமும் ரத்துசெய்யப்பட்டுள்ளது.
வங்களின் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப வர்த்தக வங்கிகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
 
வங்கிகள் தற்போது விதிக்கப்பட்டுள்ள ஏடிஎம் கட்டணங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை குழு ஒன்றை அமைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.