வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 4 ஜூன் 2019 (16:13 IST)

ஏடிஎம் -இல் கேன்சல் பட்டனை ’இருமுறை’ அழுத்தினால் என்னாகும் ?... வைரலாகும் தகவல்

இன்று அதிகரித்துள்ள நவீன தொழில்நுட்பம் மக்களின் அலைச்சலைக் குறைப்பதாக அமைகிறது. மக்கள் வங்கியில் சேமித்த பணத்தை ஏடிஎம் மெஷினில் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்பதால் அவர்களின் நேரம் மிச்சப்படுகிறது.
இந்நிலையில் ஏடிஎம் எந்திரத்தில் உள்ள கேன்சல் பட்டனை இருமுறை க்ளிக் செய்தோம் என்றால் யாரும் நமது ஏடிஎம் பின் எண்ணைத் திருட முடியாது என தற்போது சமூக வலைதளைத்தில் ஒருதகவல் வைரலாகிவருகிறது.
 
அதில்,இந்திய ரிசர்வ் வங்கி  மக்களிடம், ஏடிஎம் பயன்படுத்திய பின்னர் இருமுறை கேன்சல் பட்டனை இருமுறை க்ளிக் செய்தால் பயனாளரின் ரகசிய குறியீட்டு எண்ணை மற்றவர்களால் திருட முடியாது என்று தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்தத்தகவலை வதந்தி என்றும் இது போன்ற தகவல்களை யாரும் நம்ம வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.
 
மேலும் ரிசர்வ் வங்கி யாருக்கும் எந்த தகவல்களையும் அனுப்புவதில்லை  என்றும், இதுபோன்ற தகவல்களை வாட்ஸப், டுவிட்டர், இணையதளம், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களுக்கு குறிப்பிட்ட வங்கிகள் தான் அனுப்புவதாகவும் செய்திகள் வெளியாகின்றது.