திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 27 செப்டம்பர் 2018 (10:32 IST)

எங்களை பிரித்துவிட வேண்டாம்: 65 வயது ஆசிரியரை மணமுடித்த 20 வயது பெண் கதறல்

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 65 வயது ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை 20 வயது இளம்பெண் சமீபத்தில் திருமணம் செய்த விவகாரம் பெரும் சர்ச்சையாகியது. இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் பெற்றோர் தங்கள் மகளை மீட்டு தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார் தலைமறைவாக இருந்த இந்த ஜோடியை கண்டுபிடித்தனர். இருவரிட்மும் நடத்திய விசாரணையில் இளம்பெண் விருப்பப்பட்டே ஆசிரியரை திருமணம் செய்ததாகவும் இருவரும் ஒரு வருடத்திற்கு முன்பே ரிஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.

போலீசார் முன்னிலையில் தன்னை தன்னுடைய கணவரிடம் இருந்து பிரித்துவிட வேண்டாம் என அந்த இளம்பெண் கெஞ்சியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இது பொருந்தா காதல் என்று போலீசாரும், அந்த பெண்ணின் தந்தையும் எவ்வளவோ எடுத்து கூறியும் அந்த இளம்பெண் பிடிவாதமாக வாழ்ந்தால் அவரோடுதான் வாழ்வேன் என்று உறுதியாக நின்றார். மேலும் இந்த விஷயம் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதால் நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை காத்திருக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.