வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 30 ஜூலை 2019 (20:02 IST)

மிக பிரமாண்ட வணிக வளாகத்திற்கு வந்த சோதனை ? மக்கள் அதிர்ச்சி

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் இயங்கிவருகிறது லுலு என்ற  மிக பிரமாண்டமான வணிக வளாகம். தற்போது இந்த வணிக வளாகத்திற்கு அளிக்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி தொடர்பாக எம்.கே சலீம் என்பவர் கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், லுலு வணிக வளாகமானது 1 லட்சத்து 50 ஆயிரம் அடிக்கு மேலான பரப்பளவுக்கு கட்டப்பட்டுள்ளதால் இதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தான் சுற்றுச்சூழல் அனுமதி அளித்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
 
இதனைத்தொடர்ந்து இவ்வழக்கை கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஹரிஷிகெஷ் ராய் மற்றும் நீதிபதி ஏகே ஜெய சங்கரன் நம்பியார் கொண்ட அமர்வு விசாரித்துவந்தது. இதுகுறித்து லுலு வணிகவளாகத்திற்கு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பினர்.
 
இதற்கு  பதலளித்த லுலு வணிக வளாகம் சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. கேரளா மாநில சுற்றுச்சூழல் துறை முறையாக எங்களுக்கு அனுமதி வழங்கியது. இந்தவளாகம கட்டுவதற்க்கான விதிமுறைகளும் சரியாகவே பினப்ற்றப்பட்டன. மேலும் குடியிரிப்பு திட்டத்தின்படி வரும் கட்டிடங்கள் 3 லட்சம் சதுர சடிக்கு குறைவாக இருந்தால் மாநில அமைச்சகமே அதற்கு அனுமதி தரலாம்,, என்ற வகையில் மொத்தமுள்ள 2 லட்சத்து 32 ஆயிரம் அடி பரப்பளவுக்கு கொண்ட எங்கள் லுலு  நிருவனத்திற்கு மாநில சுற்றுச்சூழல் துறையிடமே அனுமதி பெறப்பட்டது என்று கூறியுள்ளது. இந்நிலையில் இந்தப் பிரமாண தாக்கல் குறித்து இவ்வழக்கை தொடந்த சலீம்  பதில் தர கால அவகாசம் அளித்து நீதிபதிகள் வழக்கை ஒத்துவைத்துள்ளாதாகவும் தகவல்கள் வெளியாகிறது.