ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 10 ஜூலை 2019 (17:22 IST)

13 வயதில் உலக சாதனை படைத்த சிறுவன் ...குவியும் பாராட்டுக்கள்

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் 100 புத்தகங்களை எழுதி சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை பாராட்டி பலரும் அவருக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மிரிகேந்திர ராஜ் என்ற 13 வயது சிறுவன் .  இவருக்கு புத்தகம் படிப்பதும் எழுதுவதும் மிகவும் பிடித்தமான விசயமாகும். அதனால் அவர் ஏராளமான புத்தகங்களை படிப்பதுடன், பல புத்தகங்களை எழுதியுள்ளார்.
 
மிராஜ் தன்னுடைய 6 வயது முதல் எழுதிவருகிறார். தற்போது  அவர்  எழுதியுள்ள புத்தகங்களின் எண்ணிக்கை 135 ஆகும். இந்த புத்தகங்கள் ஒவ்வொன்றும் சுமார் 25 முதல் 100  பக்கங்களைக் கொண்டது ஆகும்.
 
மேலும் மிராஜ், உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் உள்பட பல்வேறு பிரபலங்கள் குறித்து புத்தகங்கள் எழுதியுள்ளார். மிராஜ் இதுவரை 4 உலக சாதனைகள் புரிந்துள்ளதாகவும், லண்டன் உலக சாதனைகள் பல்கலைக்கழகம் அவருக்கு முனைவர் பட்டம் கொடுக்க முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.