உத்திர பிரதேசத்தில், 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளியை கண்டுபிடித்து என்க்கவுண்டரில் சுட்ட போலீஸ் அதிகாரிக்கு பாராட்டுகள் குவிகின்றன.
உத்திர பிரதேச மாநிலம், ராம்பூர் மாவட்டத்தில் கடந்த மே 7 ஆம் தேதி, 6 வயது சிறுமி ஒருவரை நாசில் அஹமத் என்ற நபர் பலாத்காரம் செய்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில் குற்றவாளியான நாசில் அஹமத், பல நாட்களாக போலீஸ் கண்களில் சிக்காமல் தலைமறைவில் இருந்தார். பின்பு இந்த வழக்கை கையில் எடுத்த போலீஸ் அதிகாரி எஸ்.பி. அஜய் பவுல் சர்மா என்பவர், நாசிலை தேடி வந்துள்ளனர்.
மும்முரமாக தேடி கொண்டிருந்த அஜய் பவுல் தலைமையிலான போலீஸ் குழுவிற்கு, பல நாட்களாக துப்பு எதுவும் கிடைக்கவில்லை. எனினும் தனது விடாமுயற்சியை தவறவிடாத எஸ்.பி. அஜய் பால் தனியாளாக களத்தில் குதித்தார்.
பல நாட்களாக அலைந்து திரிந்த நிலையில், நாசில் மறைந்திருந்த பகுதி எந்த பகுதியென்ற துப்பு கிடைத்தது. பின்பு அந்த பகுதியில் நாசிலின் இருப்பிடத்தை கண்டுபிடித்தார் அஜய் பவுல்.
அஜய் பவுலை பார்த்தவுடன், அவரிடம் சிக்காமல் தப்பிக்கும் முயற்சியில் நாசில் அங்கிருந்து ஓடியுள்ளார். பின்பு இந்த முறை தவறவிடக்கூடாது என்று முடிவெடுத்த அஜய் பவுல், தனது கைத்துப்பாகியை உறையிலிருந்து எடுத்து, நாசிலின் கால்களை குறிபார்த்து மூன்று முறை சுட்டார்.
துப்பாக்கி சுடும் பயிற்சியில் திறம் பெற்றிருந்த எஸ்.பி. அஜய் பவுலின் குண்டுகளிலிருந்து நாசிலால் தப்பிக்க முடியவில்லை. இரண்டு கால்களிலும் குண்டடி பட்ட நாசில், மேலும் அடியெடுத்து வைக்க முடியாமல் அங்கேயே சுருண்டு விழுந்தார்.
அதன் பின்பு நாசில் தன்னுடைய தலைமையிலான போலீஸ் படையை சம்பவ இடத்திற்கு வரவழைத்து நாசிலை கைது செய்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் நாசில் தனது வாக்குமூலத்தின் மூலம் தான் செய்த பலாத்கார குற்றத்தை ஏற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எஸ்.பி. அஜய் பவுல் சர்மாவின் இந்த என்கவுண்ட்டர் சம்பவம் உத்திர பிரதேச போலீஸ் அதிகாரிகளிடம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உயர் அதிகாரிகள் அனைவரிடமிருந்தும் அஜய் பவுலுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.
இது குறித்து எஸ்.பி. அஜய் பவுல் சர்மா தனது டிவிட்டர் பக்கத்தில், தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் தான் பெரும் நன்றியை தெரிவித்துகொள்வதாகவும், இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் தனக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன என்றும், தனது நன்றியை வெளிப்படுத்தும் விதமாக பகிர்ந்துள்ளார்.
எஸ்.பி. அஜய் பவுல் சர்மா இதற்கு முன் பல குற்றவாளிகளை என்கவுண்டர் செய்திருக்கிறாராம். ஆதலால் இவரை உத்திர பிரதேச மாநில போலீஸார்கள் மத்தியில் ”என்கவுண்டர் சிங்கம்’ என்று அழைக்கப்படுகிறார்.
கடந்த 2018 ஆம் ஆண்டில், எந்தெந்த போலீஸார் மாமூலில் ஈடுபடுகிறார்கள் என்று கண்காணிப்பதற்காக பல முறை மாறு வேஷத்தில் சென்று மாமூல் வாங்கும் போலீஸார்களை கையும் களவுமாக பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.