புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (11:41 IST)

ஜம்முவில் தீவிரவாதிகள் தாக்குதல்: பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் பலி

ஜம்மு காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருவதும் இந்திய வீரர்கள் அதற்கு பதிலடி கொடுத்து வருவதும் தொடர்கதையாகி வருகிறது
 
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தியதில் 3 பாதுகாப்பு படை வீரர்கள் பலியானதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் கிரீரி என்ற பகுதியில் திடீரென தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார். இதனை அடுத்து சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீஸார்கள் திருப்பி தாக்கினர். இந்த தாக்குதலில் பலியானவர்களில் இருவர் சிஆர்பிஎஃப் வீரர்கள் என்றும் ஒருவர் காஷ்மீர் மாநில போலீஸ் என்றும் தெரியவந்துள்ளது 
 
இதனை அடுத்து போலீஸ் பகுதியை ராணுவம் சுற்றி வளைத்துச் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு 3 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்