ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 17 பிப்ரவரி 2019 (09:47 IST)

எல்லாவற்றிற்கும் அரசியல்வாதிகள்தான் காரணம்–தாக்குதல் நடத்திய அமகதின் தந்தை பேட்டி !

காஷ்மீரில் உள்ள பிரச்சினைகள் யாவும் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டுமென்றும் தற்கொலைப் படைதாக்குதல் நடத்திய அதில் அகமதின் தந்தை கூறியுள்ளார்.

காஷ்மீரில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகளால் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 45 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத அமைப்புப் பொறுப்பேற்றுள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி அதில் அகமது 350 கிலோ எடைக் கொண்ட வெடிப்பொருட்களோடு அதிகாலை நேரத்தில் இந்திய வீரர்களின் வாகனத்தில் மோதி இந்தத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளார். மேலும் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றன. இது தொடர்பாக மத்திய அரசு விரைவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த இருக்கிறது.

இந்தத் தாக்குதல் நடத்திய அதில் அகமதின் தந்தை காஷ்மீர் பிரச்சனைக் குறித்து தனது கருத்தினைப் பதிவு செய்துள்ளார். இங்குள்ள (காஷ்மீரில் ) உள்ள தீர்க்கப்படாத பிரச்சனைகளே இந்த மரணங்களுக்குக் காரணமாகும். இந்தப் பிரச்சனைகளுக்கானக் காரணமாக இருக்கும் அரசியல் வாதிகள் அவர்களின் குடும்பத்திற்கு பாதிப்பு ஏற்படும் வரையில் எந்த முடிவையும் எடுக்க மாட்டார்கள்.

என் மகன் என்று ஆயுதம் எடுத்தானோ அன்றே அவனது மரணம் தீர்மானிக்கப்பட்டு விட்டது. என் மகன் கடின உழைப்பாளி. மிகவும் கூச்ச சுபாவமுடையவன். அகமதிற்குக் கிரிக்கெட் என்றால் ரொம்ப பிடிக்கும். தோனியின் தீவிர ரசிகன். இந்தக் கொலைகளால் யாருக்கும் எந்த மகிழ்ச்சியும் இல்லை. காஷ்மீரில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் உயிர்த்தியாகம் செய்கிறார்கள். ஆனால் இப்போது எல்லோரும் ஆவேசப்படுகிறார்கள். ’ எனக் கூறியுள்ளார்.