Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மின்னல் தாக்கி 10 பேர் பலி...


Murugan| Last Modified ஞாயிறு, 8 அக்டோபர் 2017 (13:19 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் மின்னல் தாக்கி 10 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 
மகாராஷ்டிரா மாநிலம் மராத்வாடா பகுதியில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பீட் மாவட்டத்தில் உள்ள துர்கா தாலுக்காவில் சர்தாரி ககர்வாடா பகுதியில் நேற்று மழை கொட்டி தீர்த்தது. அப்போது, மின்னல் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
 
அதேபோல், மஜால்காவ் தாலுகாவில் மரத்தின் அடியே ஒதுங்கிய 55 வயது பெண்மணியும் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.
 
மேலும், அதே பகுதியில் உள்ள ஆற்றின் பாலத்தில் சென்று கொண்டிருந்த ஒரு வாலிபர், ஒரு பெண் உட்பட 3 பேர் மின்னல் தாக்கி இறந்தனர். அதோடு, ஜல்னா மாவட்டத்தில் தொபடேஷ்வர் கிராமத்தை சேர்ந்த சந்திரபகா தபாடே(52) என்பதும் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
 
தொடர்ந்து பெய்து வரும் மழையால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :