1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (19:56 IST)

கோயில் சுவர் இடிந்து மக்கள் உயிரிழப்பு.. பலர் படுகாயம்

மேற்கு வங்க மாநிலம் பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள கச்சுவாலில் லோக்நாத் கோயில் உள்ளது. இன்று கிருஷ்ண  ஜெயந்தியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வந்தனர். இதனால் கோயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. 
இந்நிலையில் இன்று காலையில் அங்கு மழை பெய்ததால், மழையில் நனைய முடியாமல் பக்தர்கள் கோயிலுக்கும் சென்றனர். அந்த சமயத்தில் சுவர் இடிந்து விழுந்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 27 பேருக்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்தனர். 
 
இதனையடுத்து படுகாயம் அடைந்த மக்களை கொல்கத்தா தேசிய கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று  ஆறுதல் கூறிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 5 லட்சமும் , பாடுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும் இழப்பீடாக வழங்குமாறு உத்தரவிட்டார்.