Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிறைகளை மூட தெலங்கானா அரசு யோசனை...

Last Updated: செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (17:07 IST)
தெலங்கானா மாநிலத்தில் ஐந்து துணை சிறைகளை மூட அந்மாநில அரசு முடிவு செய்துள்ளதாம். அம்மாநிலத்தில் கைதிகளின் எண்ணிக்கை குறைந்த்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, சிறைத்துறை டிஜிபி வி.கே.சிங் பின்வருமாறு கூறியுள்ளார். தெலங்கானா மாநிலத்தில் மத்திய சிறைகள் தவிர்த்து 35 கிளைச்சிறைகள் செயல்பட்டு வருகின்றது. எனவே, 5 கிளை சிறைகளை அவற்றை மூட மாநில அரசு முடிவு செய்துள்ளது.

10 அறைகள் கொண்ட அர்மூர் சிறையில் தற்போது வெறும் இரண்டு கைதிகள் மட்டுமே உள்ளனர். 17 அறைகள் கொண்ட போதன் சிறையில் இரண்டு கைதிகள் மட்டுமே உள்ளனர். மற்ற சிறைகளிலும் குறைவான கைதிகளே உள்ளதால் அவற்றை மூட முடிவு செய்துள்ளோம்.
மேலும், அண்டை மாநிலங்களில் உள்ள கைதிகளை அடைக்க மூடப்பட்ட சிறைகளை வாடகைக்கு விடும் திட்டத்தையும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாம்.


இதில் மேலும் படிக்கவும் :