ஆர்எஸ்எஸ்-இல் சேராதவர்கள் இந்துக்களே இல்லை: பாஜக சர்ச்சை கருத்து!

Last Modified செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (15:52 IST)
ஆர்எஸ்எஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளதாவர்கள் இந்துக்களாக இருக்க முடியாது என்று ஐதராபாத் தொகுதி பாஜக எம்.எல்.ஏ., ராஜா சிங் தெரிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேச மாநில நீமச் மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் நடத்தப்படும் ஷகாஸ் கூட்டம் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்தது. இதில் ஐதராபாத் தொகுதி பாஜக எம்.எல்.ஏ., ராஜா சிங் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் பேசிய அவர், ஆர்எஸ்எஸ் என்ற நிறுவனத்தில் இருந்து தான் மோடி, ஆத்தியநாத் போன்ற தலைவர்கள் உருவானர்கள். அதனால் அனைவரும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களாக வேண்டும். அப்படி ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேராதவர்கள் கண்டிப்பாக இந்துவாக இருக்க முடியாது என கூறினார். இது சர்ச்சையை எற்படுத்தியுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :