Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சாக்லெட் தருவதாக கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்கள்

Harassment
Last Updated: சனி, 2 டிசம்பர் 2017 (15:47 IST)
கொல்கத்தாவில் 4ஆம் வகுப்பு மாணவியை சாக்லெட் வாங்கி வருவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த 2 பள்ளி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 
கொல்கத்தாவில் 4ஆம் வகுப்பு மாணவியை 2 ஆசிரியர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அந்த ஆசிரியர்களை கைது செய்தனர். 
 
ஆசிரியர்கள் சிறுமிக்கு சாக்லெட் வாங்கி தருவதாக கூறி கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பள்ளிக்கு அனுப்பப்பட்ட குழந்தைக்கு பாதுகாப்பு இல்லை என கூறி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். பள்ளி தலைமை ஆசிரியரையும் கைது செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.
 
இதுகுறித்து பேசிய பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறியதாவது:-
 
பள்ளியில் சிசிடிவி கேமரா இல்லாததால் நடந்தது குறித்து முழுமையாக தகவல் தெரியவில்லை. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :