திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 27 ஏப்ரல் 2022 (18:10 IST)

5000 கோடி டெண்டரை கைப்பற்றியது டாடா நிறுவனம்!

tata
5,000 கோடி மதிப்பிலான மின்சார பேருந்துகளுக்கான டெண்டரை டாடா நிறுவனம் கைப்பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
புது டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், சூரத் ஆகிய நகரங்களில் மின்சார ஏசி பேருந்துகள், மற்றும் ஏசி இல்லாத பேருந்துகள், சாதாரண சாதாரண என ஐந்து பிரிவுகளில் மொத்தம் 5 ஆயிரத்து 460 பேருந்துகளுக்கான டெண்டர் சமீபத்தில் கோரப்பட்டது.
 
இந்த டெண்டரில் டாடா மோட்டார்ஸ் உள்பட 3 நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில் டாடா நிறுவனத்திற்கு இந்த டெண்டர் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
மற்ற நிறுவனத்தின் டெண்டரை விட வெறும் 10 ரூபாய் குறைவாக இருந்ததால் டாடா நிறுவனத்திற்கு இந்த டெண்டர் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது